முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிறந்த குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை

பிறந்த குழந்தைள் வீறிட்டு அழுவதை நாம் கேட்டிருப்போம். பசியின் போதும், தாயின் துணை தேடியும் பிறந்த குழந்தைகள் அழுவது வழக்கம். ஆனால் நமக்கு இதுவரை தெரியாத ஒன்று என்ன தெரியுமா.. அவ்வாறு அழுதாலும் அவர்களுக்கு கண்ணீர் வருவதில்லை என்பதுதான். ஏன் தெரியுமா.. பிறந்த குழந்தையின் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. கண்ணீர் சுரப்பிகள் 4 முதல் 12 வாரங்களுக்கு பிறகே வளரத் தொடங்கும். பிறகென்ன அதற்கு பிறகு கண்ணீர் மழைதான்.

பெண்கள் பொது இடத்தில் தொப்பி அணிந்தால் அபராதம்

ஆடை உலகில் இன்றைக்கு ஆண்கள் பெண்களை கடந்து அத்துறை எங்கோ சென்று விட்டது. ஆனால் கடந்த காலங்களில் பெண்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் 1500 களில் அரசி முதலாம் எலிசபெத் ஆட்சி நடைபெற்று வந்தது. முதலாம் எலிசபெத் தொப்பி அணிவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் விதவிதமாக தொப்பிகளை அணிவதுடன், அவற்றை சேகரிக்கவும் செய்தார். இதன் காரணமாக அவரது ஆட்சியின் போது வார இறுதி நாட்களில் பொது இடங்களில் பெண்கள் தொப்பி அணிய தடை விதிக்கப்பட்டது. தவறி அவ்வாறு யாராவது தொப்பி அணிந்து பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முக பொலிவுக்கு ....

வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் பெண்களின் முகம் ஜொலிக்கும்.

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அண்டார்டிகா துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் செய்த முதல் இந்திய பெண்

அண்டார்டிகா எனப்படும் பூமியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பனிப்படர்ந்த துருவ பிரதேசம். இங்கு பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய சாகசம். ஏறக்குறைய உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண்ணான  ஹர்பிரீத் சான்டி முதன்முறையாக துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். 40 நாட்கள் அப்பகுதியில் அவர் மேற்கொண்டு திரும்பிய சாகச பயண செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக  பரவி வருகிறது. அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

கால்சியம் சத்து

உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்க பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து அதை தடுக்கலாம். சோயா பாலில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago