முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சருமம் பளபளக்க...

ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழ த்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய காட்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும். இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.

உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம்

உலகின்  முதல் முழு நீள அனிமேஷன் சினிமா எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா.. நாம் அனைவரும் யூகிப்பது போல அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டிலோ.. இங்கிலாந்திலோ அல்ல. மாறாக உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்டது.  El Apóstol  என்று பெயரிடப்பட்ட அரசியல் நகைச்சுவை படமாக இந்த படம் 1917 இல் தயாரிக்கப்பட்டது. 70 நிமிடங்கள் கொண்ட அப்படத்தை  Quirino Cristiani என்ற இத்தாலியர் அப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், பெரும்பாலும் 1937 இல் வால்ட் டிஸ்னியால் எடுக்கப்பட்ட Snow White and the Seven Dwarfs என்ற படத்தையே முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள அனிமேஷன் படம் என பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த அர்ஜென்டினா படம் கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களை கேள்வி கேட்கும்

தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேப்போல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோ என்ற வார்த்தை எப்போது அறிமுகமானது

ரோபோ தமிழர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா மூலம் பரவலாக அறிமுகமானது எனலாம். அவரது ஜீனோ என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. “ரோபோ” என்கிற வார்த்தை பிறந்தது 1920ல். பெயர் சூட்டியவர் பிரபல செக் கலைஞர் ஜோசெஃப் சாபெக். அவருடைய தமையன் கேரல் சாபெக் நாடகத்தில் முதன் முறையாக இந்த வார்த்தையை உபயோகித்தார்.மனிதனை ஒத்த உருவத்துடன்ன் இருந்தால்தான் அதற்குப் பெயர் ரோபோ என்பது தவறு. தொழிற்சாலைகளில் நிறைய ரோபோக்களைக் காண முடியும். கார் தயாரிக்கும் இடங்களில் பெரிய பெரிய கைகள் (கைகள் மட்டுமே!) உடைய ரோபோக்களைப் பார்க்கலாம். நூறு ரோபோக்களில் நாற்பது ஜப்பானில் தான் தயாராகின்றன. 

முழு பிரபஞ்சமும் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது

மனிதன் அறிவியலில் எவ்வளவோ முன்னேறிவிட்டதாக பீற்றிக் கொள்ளலாம். ஆனால் பிரபஞ்சத்தின் முன்னால் அது இம்மி கூட கிடையாது. பிரபஞ்சத்தில் தற்கால நவீன மனிதன் தேடி கண்டடைந்த பிரபஞ்சம் எல்லாம் சூரிய குடும்பத்தில் ஒளி பாயும் அளவுக்குத்தான். அதை மொத்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடும் போது 10 சதவீதம் கூட கிடையாது. மீதமுள்ள 90 சதவீத பிரபஞ்சம் இருளில் ஆழ்ந்திருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்பதை பற்றி நமக்கு துளியும் தெரியாது. சூரியன், நட்சத்திரம் போன்ற ஒளி வீசும் கிரகங்களின் ஒளி செல்லாத பகுதிகளையும் தாண்டி பிரபஞ்சம் விரிந்து கிடக்கிறது. அந்த இருளுக்குள் ஆழ்ந்திருப்பது என்ன என்பதுதான் டிரில்லியன் டாலர் கேள்வி.  இதையெல்லாம் நாம் சொல்லவில்லை அறிவியல் இணைய தளத்தில் வெளியான ஆய்வு சொல்கிறது.

குட்டி மொழி, Little language

உலக மொழிகளிலே குறைந்த சொற்களை கொண்ட மொழி - டாகி. கயானா நாட்டின் ஒருசில பகுதிகளில் இது பேசபடுகிறது. இம்மொழியில் வெறும் 340 சொற்கள் மட்டுமே உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago