முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சாதனை வைரம்

ஹாங்காங்கில் சொதேபி என்ற ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் 59.6 கேரட் அளவிலான அரிய வகை இளம்சிவப்பு நிற வைரம் ஏலம் விடப்பட்டது. இதை நகை வியாபாரி ஒருவர் சுமார் 463 கோடிக்கு ஏலம் எடுத்தார்.  இதன்மூலம் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வைரம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

அதிக நேரம் அல்ல, 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று கேட்டவுடன் நமக்கு கும்பகர்ணன் நினைவுக்கு வரும். அதெல்லாம் கதைக்குத்தான், மனிதனால் 6 மாதம் எல்லாம் தூங்க இயலாது. அது கிடக்கட்டும். கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இதில் சாம்பியன் கரடி என்று நீங்கள் நினைத்தால் தவறு.. அது குட்டியூண்டு நத்தை தான். இவை 3 ஆண்டுகள் வரை தூங்குமாம். சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன.

உலகிலேயே அதிக விலைக்கு விற்ற புத்தகம்

இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.

பணமே இல்லையாம்

சிங்கப்பூரில் 61 சதவீதத்தினரும், நெதர்லாந்தில் 60 சதவீதத்தினரும், பிரான்ஸில் 59 சதவீத மக்களும்,  ஜெர்மனியில் 33 சதவீதத்தினரும், ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்து கின்றனர். எனவே மேலே கூறியுள்ள நாட்டிற்குச் செல்லும் போது ரூபாய் நோட்டுகள் பற்றி கவலைப்படாமல் சென்று வரலாம்.

வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் தங்கும், வெள்ளை மாளிகை சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆறு தளங்களில், 132 அறைகள், 35 குளியலறைகள், 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 8 மாடிப் படிகள், 3 மின் தூக்கிகள் உள்ளன. அதிபருக்கு சமைப்பதற்காகவே 5 சமையல் கலைஞர்கள் எப்போதும் பணியில் இருப்பார்களாம்.

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago