முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நேரம் அதிகம்

பூமி சுற்றுப்பாதை தொடர்பாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் படி, பூமியில் ஏற்பட்டு வரும் சில மாற்றத்தால் இதுவரை 24 மணி நேரமாக இருந்த ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறவுள்ளதாகக் தெரிவித்துள்ளனர். கடந்த 27 நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அளவு விரிவடைந்து வருகிறதாம். இந்த இரண்டு மில்லி நொடிகள் என்பது ஒரு நிமிடமாக மாற இன்னும் 6.7 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என கணக்கிட்டுள்ளனர். அதன்படி, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என்கின்றனர்.

ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடம் எது தெரியுமா?

நமக்கெல்லாம் ஆண்டில் சில மாதங்கள், வாரங்கள் மழை பெய்தாலே ஐயோ அப்பா என அலறத் தொடங்கி விடுகிறோம். ஆண்டு முழுவதும் மழை பெய்தால்.. அவ்வளவுதான்.. ஆனால் ஒரு காலத்தில் மாதம் மும்மாரி அதாவது மூன்று முறை மழை பெய்த காலங்கள் எல்லாம் இருந்தன. அதெல்லாம் ஓர் கார் காலம். சரி விஷயத்துக்கு வருவோம்... ஹவாய் தீவில் உள்ள Kauai என்ற இடத்தில் Waialeale மலைப்பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 350 நாட்களும் மழை பெய்கிறதாம். அம்மாடியோவ்... நினைத்தாலே குளிரக்கிறது அல்லவா.

உறங்கும் போது எப்படி படுக்க வேண்டும்

முந்தைய இரவு உறக்கத்தைப் பொருத்தே அடுத்த நாளின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுவதால் உடலுக்கு தூக்கம் தவிர்க்க முடியாதது. ஆனால், எந்த நிலையில் தூங்கினால் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பது முக்கியமானது. உங்களுடைய முதுகெலும்பை சரியாக சீரமைக்கும் நிலையில் தூங்குவதன் மூலம் மட்டுமே தூக்கம் மேம்படும். உடலில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. முதுகு படுக்கையில் படும்படி கிடைமட்டமாக படுத்துத் தூங்குவது முதுகெலும்பை சரியான நிலையில் பராமரிக்கிறது. இது கீழ் முதுகு மற்றும் கழுத்துத் தசைகள் இரண்டையும் தளர்த்தும். இந்த நிலையில் தூங்குவது ஒரு நிம்மதியான தூக்கத்தைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மெல்லிய மெத்தை, தலையணையை உபயோகித்தால் தோள்பட்டை அல்லது கழுத்து வலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

தலையணை இல்லாமல்...

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான, கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம். மேலும், தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது. ஆனால், நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

செவ்வாயில் ஆக்சிஸன் தயாரித்த நாசா

செவ்வாயில் முதன்முறையாக நாசா தனது பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் மூலம் ஆக்சிஸனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள மோக்ஸி என்ற இயந்திரம் மூலம் இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் செவ்வாயில் உள்ள சூழலை பயன்படுத்தி, அதில் உள்ள பெரும்பான்மையான கார்பன் டை ஆக்ஸைடை  ஆக்ஸிசனாக மாற்றியுள்ளது. இந்த முயற்சியானது மனிதர்கள் எதிர்காலத்தில் செவ்வாயில் குடியேறுவதற்கான ஒரு அச்சாரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago