முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நரம்பு தளர்ச்சி குணமாக சில சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

  1. நரம்பு தளர்ச்சி;-- சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர பலவீனம் மாறும்.ஆண்மை பெருகும்.
  2. நரம்பு சிலந்தி ;--சீரா செங்கழு நீர் இலையை அரைத்துக் கட்ட குணமாகும்.
  3. நரம்பு தளர்ச்சி நீங்க ;--அத்திப்பழத்தை தினந்தோறும் 5 சாப்பிட்டு வர தீரும்.
  4. நரம்பு வலி ;--துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  5. மூளை,நரம்பு சம்பந்தமான நோய் குணமாக ;--நாயுருவி வேர்,கரிசலாங்கன்னி ஆகியவற்றை பயன்படுத்தலாம். 
  6. நரம்பு இழுப்பு ;--ஆடாதொடை வேர் கண்டங்கத்திரி  வேர் ஆகியவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
  7. நரம்பு தசை வலுப்பெற ;-- கோபுரம் தாங்கி செடியின் வேரை பொடி செய்து அதனுடன் கற்கண்டு சேர்த்து காலை,மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்.
  8. நரம்பு கோளாறு நீங்க ;-- வெள்ளறுகு சமூலம்,மிளகு, சுக்கு,சீரகம் ஆகியவற்றை கஷாயம் செய்து காலை,மாலை 50 மில்லி குடிக்கலாம்.
  9. நரம்பு சிலந்தி குணமாக ;--வேப்பம்பூ மற்றும் வேப்பவிதையை அரைத்துக்கட்டலாம்.
  10. நரம்பு சுறுசுறுப்படைய ;--இலந்தை வேரை கஷாயம் செய்து 48 நாட்கள் குடித்து வரலாம்.
  11. நரம்பு தளர்ச்சி குணமாக ;--மாதுளம் பழசாறில்  தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்