முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தலைவலி குணமாக சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

 

மண்டை குடைச்சல் தீர ;-- தழுதாழை இலை சாறை மூக்கில் உறிஞ்சி வர தீரும்.

தலைவலி குணமாக ;-- அகத்தி இலைசாறு எடுத்து நெற்றியில் தடவலாம்.

ஒற்றை தலைவலி குணமாக ;--  எட்டி மரக்கொழுந்து,மிளகு மற்றும் பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வரலாம்.

தலைவலி நீங்க ;--  குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பத்து போடலாம்.

எல்லா வித தலைவலியும் தீர ;-- மிளகாய்வற்றல்,மிளகு ஆகியவற்றை  நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் ஒரு நாள் தலைமுழுகி வரலாம்.

மண்டை குடைச்சல் தீர ;-- வில்வ இலை பொடியில்  அரை கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம்.

தலை சுற்றல்,இரத்த கொதிப்பு தீர ;-- நெல்லிவற்றல்,பச்சைபயறு போட்டு கஷாயம் செய்து காலை மாலை சாப்பிடலாம்.

தலைவலி குணமாக ;-- சுக்கை அரைத்து பற்றிடலாம்.

மண்டை கொதிப்பு ;-- கோபுரம் தாங்கி இலைசாறை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வரலாம்.

மண்டை குடைச்சல் நீங்க ;-- தழுதாழை இலைசாறை மூக்கில் உறிஞ்சி வர நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony