முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் 11 இயற்கை உணவுகள்

இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க இயற்கை உணவுகள் முறையில் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி அதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

பாகற்காய்,கோவக்காய்,வெண்டைக்காய்,பீன்ஸ்,வெந்தயம்,பட்டை,நாவல் பழம்,சிறுகுறிஞ்சான் பொடி,நெல்லிக்காய்,அருகம் புல் மற்றும் ஆவாரம்பூ,என 11 வகையான பொருட்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இவற்றை எப்படி நமது உணவு முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம்

1.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பாகற்காயை பச்சையாக சாப்பிடக்கூடாது,சமைத்து தான் சாப்பிட வேண்டும்,சூப் செய்தும் சாப்பிடலாம்.

2.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் கோவக்காயை பழுக்க வைத்து சாப்பிட வேண்டும்.சர்க்கரை அளவு 300 மற்றும் 400 என இருந்தாலும் கோவக்காயை சாப்பிட சர்க்கரை நோய் குறையும். 

3. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் வெண்டைக்காயை நறுக்கி இரவு நீரில் ஊற வைத்து காலை அந்த ஊற வைத்த நீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் குறையும். வெண்டைக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது,இதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

4.இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. பீன்சை அரைத்து சாப்பிட வேண்டும் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்,சர்க்கரை நோய் குறையும்.,பீன்சை தொடர்ந்து சாப்பிட்டு வர கிட்னி கல்லும் கரையும்.

5.வெந்தயம் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் மருந்தாக உள்ளது.தினமும் இரவு ஒரு டம்ளர் நீரில் 15 கிராம் வெந்தயத்தை போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த நீரை பருகி வந்தால் சர்க்கரை நோய் குறையும். வெந்தயத்தையும் எடுத்தால் இன்சுலின் சுரப்பு அபரிமிதமாக அதிகரிக்கும். இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.

6.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பட்டை இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

7.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொடியை உட்கொள்வது நீரிழிவு நோயை குறைக்க உதவுகிறது. 

8.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சிறுகுறிஞ்சான்பொடியை காலை வெறும் வயிற்றில் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.

9.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் நெல்லிக்காயை அரைத்து சாறு எடுக்கவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் வெறும் வயிற்றில் 5 முதல் 10 மில்லி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும். 

10.சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் அருகம்புல் பொடியை நீரில் கலந்து அருந்தலாம், அருகம்புல் பொடி தோல் நோய்களை குணப்படுத்த கூடியது, கண் எரிச்சலை சரிசெய்யும் தன்மை கொண்டது, வயிற்றுப் போக்கை நிறுத்தக் கூடியது.

11. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் ஆவாரம்பூ சர்க்கரை ரத்தத்தில் தேங்காமல் அவற்றை செல்லுக்குள் அனுப்புவதற்கான நொதியை தூண்டிவிடும் ஆற்றல் உண்டு. ஆவாரம்பூவை கசாயம், தேநீர் மற்றும் குடிநீராகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் சர்க்கரையின் அளவு வெகுவாய் கட்டுப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்