முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச போட்டிக்கு எம்.எஸ்.டோனி திரும்ப வாய்ப்பில்லை: கபில்தேவ்

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : நீண்ட மாதங்களாக ஓய்வில் இருக்கும் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.டோனி தற்போது நீண்ட ஓய்வில் இருக்கிறார். மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்புவாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடினால் அணிக்கு திரும்பலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் எம்.எஸ்.டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ள இருப்பதாக நான் கருதவில்லை என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘எம்.எஸ்.டோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், ஐ.பி.எல். தொடரில் இன்னும் நிலைத்து இருக்கும் அவருக்கு பார்ம் முக்கியமானது. அப்போது தேசிய அணிக்கு எது தேவை என்பதை தேர்வுக்குழுவினர் கட்டாயம் பார்க்க வேண்டும்’’ என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து