முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி: இந்திய அணி வெற்றி

வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023      விளையாட்டு
Hockey-india

ஜூனியர் பெண்களுக்கான 10-ஆவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி, சிலியில் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி, 12 நாள்கள் நடைபெற்று டிசம்பர் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் "சி'-யில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் கனடா அணியுடன் நேற்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தள்ளியது. முழுநேர ஆட்ட முடிவில் இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் கனடா அணியை ஊதித்தள்ளியது. இந்திய அணி தரப்பில் மும்தாஜ் கான் 4 கோல்களும், அன்னு மற்றும் தீபிகா தலா 3 கோல்களும், நீலம் மற்றும் டிபி மோனிகா டோப்போ தலா 1 கோலும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியுடன் விளையாட உள்ளது.

317 ரன்களில் நியூசி., அவுட்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது 

இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து சத்தினார். தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. 

ஸ்டோக்சுக்கு அறுவை சிகிச்சை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பென் ஸ்டோக்ஸ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், உடற்தகுதி காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் கடைசி மூன்று போட்டிகளில் பந்துவீச முடியவில்லை.

இதையடுத்து, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் பேட்டராக மட்டுமே களமிறங்கினார். ஒரு போட்டியில்கூட ஆல்ரவுண்டராக பந்துவீசவில்லை. இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முழு உடற்தகுதியுடன் களமிறங்கும் நோக்கில் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோக்ஸ், குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உலகக் கோப்பை மற்றும் சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அடுத்த ஐபிஎல் சீசனில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளதாக சென்னை அணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோலிக்கு சச்சின் புகழாரம் 

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரரான சச்சினின் சாதனையை தகர்த்து விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த வரிசையில் விராட் கோலி 50 சதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் 49 சதங்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.  இந்நிலையில் தம்முடைய உலக சாதனைகளை தகர்த்த விராட் கோலியிடம் இன்னும் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு நிறைய திறமைகள் இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;- விராட் கோலி 50-வது சதத்தை அடித்ததில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் அவருடைய பயணம் இத்துடன் நின்று விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 2023 உலகக்கோப்பை தோல்வியை வைத்து அவருடைய கேரியரை யாரும் முடிவு செய்ய வேண்டியதில்லை. இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறார். அவரிடம் நாட்டுக்காக இன்னும் சிறப்பாக விளையாடி நிறைய சாதனை செய்து வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேட்கை அதிகமாக இருக்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான சாதனை எப்போதும் இந்தியாவிடம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து