முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: குண்டு எறிதல் போட்டியில் சச்சின் கிலாரிக்கு தங்கம்

புதன்கிழமை, 22 மே 2024      விளையாட்டு
Sachin-Gilary 2024-05-22

Source: provided

கோபி : பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் சச்சின் கிலாரி தங்கம் பதக்கம் வென்றார். சச்சின் 16.30 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்த அவர், ஏற்கனவே தான் படைத்திருந்த ஆசிய சாதனையையும் முறியடித்தார்.

ஆண்களுக்கான...

ஜப்பானில் பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46 பிரிவு) போட்டியில் இந்திய வீரர் சச்சின சர்ஜிராவ் கிலாரி தங்கம் வென்று அசத்தினார். அவர் 16.30 மீட்டர் தூரத்திற்கு எறிந்தார். இது ஆசிய சாதனையாகும். இதற்கு முன்னதாக 16.21 மீட்டர் தூரம் வீசி ஆசிய சாதனையை இவர்தான் படைத்திருந்தார். தற்போது அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

11 பதக்கங்கள்...

இதன்மூலம் இந்தியா 11 பதக்கங்கள் பெறுள்ளது. இதில் ஐந்து தங்கப் பதக்கங்கள் அடங்கும். கடந்த முறை 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் வென்றிருந்தது. தற்போது இந்தியா அதைவிட அதிக பதக்கம் வென்றுள்ளது. F46 பிரிவு என்பது ஒன்று அல்லது இரண்டு கைகளும் செயல்படாமல் அல்லது மூட்டுக்கு கீழ் இல்லாமல் இருக்க வேண்டும். இதில் கலந்த கொள்ளும் வீரர்கள் இடுப்பு மற்றும் கால்கள் ஆகியவற்றின் ஆற்றலை கொண்டு குண்டு எறிவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து