முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவை ஏமாற்றியவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? ராஜ்நாத் சிங் கேள்வி

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

புது டெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அவரது குரு அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர், எப்படி மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்? என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை 25-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் டெல்லியில்  துவாரகா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது,

வாக்குறுதிகளை ஆம் ஆத்மி ஒருபோதும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத, டெல்லி அரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்க தகுதியில்லை. கெஜ்ரிவால், அவரது குருவான அன்னா ஹசாரேவை ஏமாற்றியவர். அவர் மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?.

குருவின் பேச்சை மீறி புதிய அரசியல் கட்சியை கெஜ்ரிவால் உருவாக்கினார். டெல்லியை லண்டனைப் போல மாற்றும் என்று ஆம் ஆத்மி கட்சியினர் சொன்னார்கள். நம் நாடு இப்போது லண்டனை விட மிகவும் முன்னேறி உள்ளது. 

யமுனை நதியை சுத்தப்படுத்துவதாக ஆம்ஆத்மி கட்சியினர் உறுதியளித்தனர். ஆனால் யமுனை நதியை சுத்தம் செய்தார்களா?. கெஜ்ரிவால் முதல்வர் இல்லத்தில் வசிக்க மாட்டேன் என்று உறுதியளித்தார். இருப்பினும், அவர் தனக்காக பெரிய மகால் கட்டினார்.

ஆம்ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து ஏதும் பேசாமல் கெஜ்ரிவால் அமைதியாக இருந்தார். நீண்ட நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

பாரதம் நிச்சயமாக ராம ராஜ்ஜியம் எழுச்சியை பெறும். இதனை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து