முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: டெல்லியில் அண்ணாமலை பேட்டி

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      இந்தியா
Annamalai 2

புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜ.க. நிரப்பி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப் பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும். 

அ.தி.மு.க. இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. 

ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜ.க.வாகத்தான் இருக்கும்.

ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அ.தி.மு.க. வெகு தொலைவுக்கு விலகி விட்டது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜ.க. பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களைத் தாண்டி விடுவோம். ஆந்திராவிலும் நல்ல எண்ணிக்கையில் இடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து