முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் கல்லூரி கலந்தாய்வு: மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Engineering 2023-06-05

சென்னை, பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு மொத்த இடங்களின் பட்டியல் ஜூலை 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.  

தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதுவரையில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ள நிலையில் ஜூன் 6-ம் தேதியுடன் அவகாசம் முடிகிறது. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு, தர வரிசை பட்டியல் வெளியீடு, ஆன்லைன் கலந்தாய்வு, ஒதுக்கீட்டு ஆணை போன்ற பணிகள் நடைபெறும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் கூறியதாவது:-

பொறியியல் கல்லூரிகளுக்கான இணைப்பு அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் வழங்குகிறது. இந்த ஆண்டும் புதிய கல்லூரிகள் மற்றும் புதிய இடங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படலாம். அங்கீகாரம் வழங்கும் பணி முடிந்து ஜூலை 2-வது வாரத்தில் பொறியியல் கல்லூரிகளின் விவரம், பி.இ., பி.டெக் இடங்கள் குறித்த பட்டியலை தருவ தாக அண்ணா பல்கலைக் கழகம் கூறியுள்ளது. 

கடந்த ஆண்டு பொது கலந்தாய்வுக்கு 2 லட்சத்து 20 இடங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு கல்லூரிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா என்பது அண்ணா பல்கலைக் கழகம் அளிக்கும் பட்டியலுக்கு பிறகே தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து