முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கமாகும். அந்த வகையில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். 

அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட வேண்டிய பாடநூல்கள், சீருடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து