முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      உலகம்
Antony-blinken

வாஷிங்டன், ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். 

கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில் வெளிநாட்டு செல்வாக்கு சட்ட மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

அந்த மசோதாவில்  வெளிநாட்டிலிருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைப் பெறும் சில நிறுவனங்கள் தங்களை வெளிநாட்டுச் செல்வாக்கின் முகவர்களாகப் பதிவு செய்ய வேண்டும். நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டும். விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா பாணி சட்டம் என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் இவ்விவகாரத்தில்  ஜார்ஜியா மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது:- 

ஜார்ஜியாவில் ஆளும் ஜார்ஜிய ட்ரீம் கட்சி வெளிநாட்டுச் செல்வாக்கு  சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றியுள்ளது. இதுகருத்துச் சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ஜார்ஜியா மக்களுக்கு சேவை செய்யும் அமைப்புகளை களங்கப்படுத்துகிறது.  

சட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.  அமைதியான எதிர்ப்பை ஒடுக்க வன்முறை பயன்படுத்தப்படுகிறது. எனவே ஜார்ஜியா மீது புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டுடனான உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது. 

புதிய விசா கொள்கையானது ஜார்ஜியாவில் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு பொறுப்பான அல்லது உடந்தையாக இருக்கும் நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பொருந்தும். அமெரிக்கா- ஜார்ஜியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்ய அமெரிக்கா தொடங்குகிறது என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து