முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நோய்த்‌ தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 430 கோடி ரூபாயில் நிவாரண திட்டம்: தமிழ்நாடு அரசு அறிக்கை

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி, தமிழ்நாட்டில் வாழும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி சமூகநலத் துறையில் பல சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்கள்.

கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்த, தாய்‌ அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின்‌ பெயரில்‌ தலா ரூ.5.00 லட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்‌போது அவர்களுக்கு வட்டியுடன்‌ வழங்கும் திட்டத்தை உருவாக்கியதால் தாயுமானவராகப் போற்றப்படுகிறார்.

மேலும், கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு தாய்‌ அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின்‌ பெற்றோர்களுக்கு தலா ரூ.3.00 லட்சம்‌ வீதம்‌ ரூ.410.46 கோடியும் மற்றும் இலங்கைத் தமிழ் ‌அகதிகளின்‌ 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.27 லட்சம் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் ‌ தொகை வழங்கினார்.

கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு, பெற்றோர்‌ இருவரையும்‌ இழந்து உறவினர்‌ அல்லது பாதுகாவலரின்‌ அரவணைப்பில்‌ வளர்ந்து வரும்‌ 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3,000 வீதம்‌ ரூ.23 கோடியே 149 லட்சம்‌ வழங்கினார். குழந்தைகளின்‌ ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ “தமிழ்நாடு மாநில குழந்தைகள்‌ பாதுகாப்புக்‌ கொள்கை 2021” வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். இப்படி தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து