முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை கரையை கடக்கும் 'ரீமால்' புயல்:மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      இந்தியா
Puyal 2023 06 11 - Copy

Source: provided

கொல்கத்தா:வங்கக் கடலில் உருவாகி வரும் 'ரீமால்' புயல், வரும் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று, தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் இதன் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்துள்ள 'ரீமால்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'ரீமால்' புயல் இன்று (சனிக்கிழமை) மேற்கு வங்கத்தில் நடைபெறும் 6ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள 8 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

'ரீமால்' புயல் தொடர்பா இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “வரும் 26ம் தேதி காலை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தின் கடற்கரைகளை மணிக்கு 110 - 120 கிலோ மீட்டர் வேகத்தில் 'ரீமால்' புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். இதன் தீவிரம் 27ம் தேதி காலை வரை கிட்டத்தட்ட 24 மணி நேரம் இருக்கும். அதன் பின்னர் தீவிரத்தை இழக்கும். 'ரீமால்' புயல் காரணமாக கொல்கத்தா, ஹவுரா, நதியா, ஜார்கிராம், வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், புர்பா மேதினிப்பூர் மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கை பகுதிகளாகும். இங்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள கடலோர மாவட்டங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து