Idhayam Matrimony

கல்வியாளர்கள் எதிர்ப்பு: இளநிலை சட்டப்படிப்பு பாட திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்க்கப்படாது: டெல்லி பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      இந்தியா
Delhi-University-2024-07-12

புது டெல்லி, இளநிலை சட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்த்ததற்கு கல்வியாளர்கள் மத்தியில், எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பாடத் திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்க்கப்படாது என்று டெல்லி பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 

டெல்லி பல்கலைக் கழகம் தனது 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளநிலை சட்டப்படிப்பில் முதல் செமஸ்டர் பாடத் திட்டத்தில் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட மனுஸ்மிரிதியை இணைத்து இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

சட்டவியல் பாடத்தில் உள்ள நேர்மறை சட்டத்தின் பகுப்பாய்வு என்ற பிரிவில் மனுஸ்மிரிதி குறித்து மிக பழமையானதாக கருதப்படும் மேதாதிதி என்பவரது விமர்சனம் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. அத்துடன் பாடம் குறித்து மேலும் அறிய மேதாதிதியின் மனுபாஷ்ய என்ற ஜிஎன்ஷா எழுதிய நூலையும் ஸ்ம்ரிதி சந்திரிகா என்ற கிருஷ்ண சாமி அய்யர் எழுதிய நூலும் அதில் பட்டியலிடப்பட்டு இருந்தது.

வர்ணாசிரமம், பாலின பாகுபாடு, வழக்கொழிந்த சமூக வரைமுறைகள், சமூகத்தை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட கொடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய கோட்பாடுகளை மனுஸ்மிரிதி கொண்டு இருப்பதால் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் நிலையில், நீதியை கற்பிக்கும் சட்டப்படிப்பில் பாகுபாட்டை போதிக்கும் மனுஸ்மிரிதியை சேர்ப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இந்த நிலையில் மனுஸ்மிரிதி தொடர்பாக பாடத்தில் சேர்க்கப்பட மாட்டாது என்று பல்கலைக் கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, 

டெல்லி பல்கலைக் கழகத்தின் சட்டத்துறையிடம் இருந்து சட்டவியல் பாடத்தில் மாற்றங்களை புகுத்த பரிந்துரைக்கப்பட்டது. நாடு மற்றும் சட்டம் குறித்த மேதாதிதியின் கருத்துரை தலைப்புக்கு  மனுஸ்மிருதியும் மனுபாஷியும் மனுஸ்மிருதியின் விமர்சனங்களும் அளிக்கப்பட்டன. இந்த இரு பகுதிகளும் அது தொடர்பான திருத்தங்களையும் டெல்லி பல்கலைக் கழகம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து