முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபந்தனையின்றி நேசிக்கிறேன்: ரசிகர்கள் குறித்து நடிகர் அஜித் உருக்கம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      சினிமா
Ajith-Kumar

Source: provided

துபாய் : என் ரசிகர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கிறேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். 

நடிகர் அஜித்  விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்காக, துபாயில் பெரிய அளவில் ’அஜித் குமார் ரேசிங்’ என்கிற பெயரில் கார் பந்தயம் துவங்கவுள்ளது. இதற்கான, பல முன்னணி வீரர்களுடன் அஜித்தும் கார் ஓட்ட உள்ளது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பயிற்சிக்கு இடையே நடிகர் அஜித்  பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அதில், “நடிப்பும் கார் பந்தயமும் உடலுழைப்பையும் உணர்ச்சிகளையும் கோரும் வேலைகள். அதனால், பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்வதை வெறுக்கிறேன். ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தின்மேல் மட்டும் கவனம் செலுத்தலாம். இது பல வழிகளிலும் சிறப்பாக இருக்கும். ” என்றார்.

அஜித் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் ரசிகர்கள் ‘தல... ஏகே...’ எனக் கத்தியதைப் பார்த்த அஜித் பேட்டி எடுத்தவரிடம், “என் ரசிகர்களைப் பாருங்கள். நான் அவர்களை நிபந்தனையில்லாமல் நேசிக்கிறேன்” எனக் கூறினார். இதனால், உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் இந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து