முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரி திடீர் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Pakis

Source: provided

இஸ்லாமாபாத்: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை இந்தியா வெளியேற்றியதை அடுத்து, தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரை 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது. உளவு பார்த்ததன் அடிப்படையிலேயே அவர் வெளியேற்றப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நடவடிக்கை என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு இந்திய அதிகாரியை வெளியேற்றவதற்கான உத்தரவை பாகிஸ்தான் பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் அறிக்கையின்படி, “இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியை, முரணான செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் அரசு அவரை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை தெரிவிக்க இந்திய தூதர் வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து