முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

வியாழக்கிழமை, 22 மே 2025      தமிழகம்
Thirumavalavan 2024-12-16

Source: provided

நெல்லை: தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.

நெல்லையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடக்கும் பிரச்சினைக்கு பின்னால் பாஜக இல்லை. திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணை வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். 

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து