முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என்றும் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என்றும் அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர் (மொத்த விற்பனை மற்றும் நிர்வாகம்) சங்கீதா மற்றும் துணை பொது மேளாளர் (விற்பனை மற்றும் கொள்முதல்) ஜோதி சங்கர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக்கை நிர்வகித்து வருகிறது, தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக 44 வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது, ஆனால் அமலாக்கத்துறை தற்போது தான் வழக்கில் வந்துள்ளனர். ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர். அதேபோல டாஸ்மாக் நிர்வாக அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டு வருகின்றன. தனி நபர் பிரைவசியை மீறும் வகையில் ஒட்டுகேட்பு நடத்தி வருகின்றனர். இது தனிநபரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க வேண்டும்.

அதேவேளையில், தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமலாக்கத்துறை டாஸ்மார் அலுவலகத்திற்கு வந்து இதுபோன்று நடந்துள்ளனர். இது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியது. அமலாக்கத்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள்:- தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா ? என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என வினவியதோடு அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறது என மீண்டும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும், அமலாக்கத்துறையானது அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என கூறியதோடு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்து ஆணையிட்டு, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டின் கோடைகால விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து