முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

வியாழக்கிழமை, 22 மே 2025      உலகம்
Gun 2023 04 17

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ளது. இங்கு திடீரனெ நேற்று  பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இவரது விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்த போது, ''பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்'' கோஷம் எழுப்பினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் கூறியதாவது: யூத சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது எல்லை மீறி உள்ளது. இந்த மோசமான குற்றவாளியை நாங்கள் நீதியின் முன் நிறுத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.  அமெரிக்காவில், இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அதிபர் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன். இந்த கொலை சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து