முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் கான் வீட்டில் அத்து மீறி நுழைய முயன்ற 2 பேர் கைது

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
Salman-Khan 2024-10-18

Source: provided

மும்பை: மும்பையிலுள்ள பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை பாந்திரா காவல் நிலையத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில், கடந்த மே 20 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அத்துமீறி நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாந்திரா பகுதியிலுள்ள கேலக்ஸி அபார்ட்மண்ட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தினுள், சல்மான் கானுக்குச் சொந்தமான வீடொன்று உள்ளது. அங்குதான், அவர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே 20 ஆம் தேதியன்று காலை, ஜித்தேந்திரா குமார் சிங் (வயது 23) என்ற நபர், சல்மான் கானின் வீட்டைச் சுற்றி வந்துள்ளார்.  அப்போது, அங்கு சல்மான் கானின் பாதுகாப்பிற்காகப் பணியமர்த்தப்பட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் ஜித்தேந்திராவை அங்கிருந்து கிளம்பச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தனது செல்போனை கீழே வீசி உடைத்துள்ளார். பின்னர், அன்று மாலை அவர், அதே கட்டடத்தில் வசிக்கும் மற்றொரு நபருக்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உள்ளே நுழைய முயன்றபோது, போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதனால், அவரை உடனடியாக பாந்திரா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதேபோல், கடந்த மே 21 ஆம் தேதியன்று, மற்றொரு பெண் உரிய அனுமதியின்றி அந்தக் கட்டடத்தினுள் நுழைந்து, சல்மான் கானின் வீட்டின் வாசல் வரைச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து