முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
India-Border

Source: provided

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.

பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210வது கோப்ரா படை, சத்தீஸ்கர் மாநில காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் ஆகியோர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (மே 22) அந்த நடவடிக்கையின்போது, கோப்ரா படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக, படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். இத்துடன், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் அப்பகுதியிலுள்ள நக்சல் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள், இந்தியாவிலுள்ள நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சத்தீஸ்கரின் நாராயணப்பூர் - பிஜப்பூர் மாவட்ட எல்லையில், நேற்று முன்தினம் (மே 21) பாதுகாப்புப் படையினரால் நக்சல் படையின் முக்கிய தளபதி உள்பட 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து