முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி தனியார் பல்கலை.யில் 1,400 போலிச் சான்றிதழ்கள் பறிமுதல்

வியாழக்கிழமை, 22 மே 2025      இந்தியா
fake-certificate

Source: provided

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை அடுத்து அதில் திடீர் சோதனை செய்த உ.பி.யின் சிறப்பு அதிரடிப் படையினருக்கு (எஸ்டிஎப்) அங்கே சுமார் 1,421 போலி சான்றிதழ்கள் கிடைத்தன.

விசாரணையில் அவற்றை பல லட்சங்கள் பெற்று விநியோகித்து வந்தது அறிந்து சிறப்பு அதிரடிப் படை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் முக்கிய குற்றவாளியாக இருக்கும் மோனாட் பல்கலையின் தலைவர் சவுத்ரி விஜயேந்திரா சிங் கைதாகி உள்ளார். இவருக்கு உதவிய பல்கலை.யின் இணை துணை வேந்தர் மற்றும் அலுவலர்கள் 10 பேரும் கைதாகி உள்ளனர். இவர்கள் மோசடிக்கு உதவியாக ஹரியானாவின் சோன்பத்திலும் ஒரு கும்பல் வேலை செய்து வந்துள்ளது. இந்த மோசடியில் விஜயேந்திராவுக்கு உதவியாக ஹரியானாவின் சோனிபத்தைச் சேர்ந்த சஞ்சய் ஷெராவாத் இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட ஷெராவாத் தீவிரமாகத் தேடப்படுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து