Idhayam Matrimony

ஈரானில் முக்கிய அணுசக்தி மையம் சேதம்; உறுதி செய்தது சர்வதேச அணுசக்தி முகமை

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      உலகம்
Iran 2025-06-16

Source: provided

டெஹ்ரான் : இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.

காசாவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ தலைமையகங்களை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், இந்தப் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது. மேலும், கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 244 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது. தெற்கு டெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கர சேதப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவச ஆலோசனைக் கூட்டம் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து