முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்: 12 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கில்லாடி பெண்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2025      இந்தியா
Marege 2023 04 10

திருப்பதி, ஓட்டல் அறையில் ஆபாச படம் எடுத்து மிரட்டி 12 பேரை திருமணம் செய்து பணம் பறித்து ஆந்திராவை சேரந்த பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராமச்சந்திர புரத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் தன்னுடன் 3 பேரை சேர்த்துக்கொண்டு குழு ஒன்றை உருவாக்கினார். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற முயற்சிப்பவர்கள், கோர்ட்டில் வழக்கு நிலுவை உள்ள ஆண்கள். திருமணமாகாத சாப்ட்வேர் என்ஜீனியர்கள், பணக்கார வீட்டு பிள்ளைகள், மனைவி வெளிநாட்டில் இருக்கும் கணவர்மார்களை குறித்துவைத்து பணம் பறிக்க திட்டமிட்டார்.

இளம்பெண் இது போன்ற ஆண்களிடம் முதலில் நலம் விசாரிப்பது போல் நடிப்பார். பின்னர் நெருக்கமாக பழக ஆரம்பிப்பாராம். பிறகு நெருக்கமான பழகும் ஆண்களிடம் ஆசைவார்த்தை கூறி அன்பு மழை பொழிவாராம். அப்போது நெருங்கி அவரது ஆசைவலைக்குள் விழும் ஆண்கள் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டு அவர்கள் சம்மதம் தெரிவித்தபின்பு தனது குழுவினருடன் சேர்ந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டு விடுவார். பின்னர் திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டுக்கு செல்லாமல் கணவருடன் ஓட்டல் அறையில் தங்கி உல்லாசமாக இருந்தார். அப்போது அந்த குழுவினர் ரகசியமாக வீடியோ படம் எடுத்துக்கொண்டனர்.வீடியோ படங்களை காண்பித்து லட்சக்கணக்கில் பணம் பறிப்பார்கள், பணம் தர மறுப்பவர்களை வீடியோ படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக வழக்கு தொடர்வதாகவும் கூறி மிரட்டல் விடுத்தனர். குடும்ப கவுரம் கருதி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இளம்பெண் 12 பேரை ரகசிய திருமணம் செய்து கோடிக்கணக்கான ரூபாயை அபகரித்து உள்ளனர். இளம்பெண்ணிடம் பணத்தை இழந்த 12 பேர் நேற்று முன்தினம் ராமச்சந்திராபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அதில் இளம்பெண் தங்களிடம் இருந்து பறித்த பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். போலீசார் இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து