முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலுதவி பயிற்சி பெற்ற 32 ஆயிரம் பேருக்கு சான்றிதழ்கள்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 21 -​செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனம் 42 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 23 மாநிலங்களில் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 117 மையங்களில் இயக்குகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் 'இயற்கை மிஷன் 2012' என்ற திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டந்தோறும் பயிற்சியாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் பேர் வீதம் 32 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவன சேர்மன் டாக்டர் வடிவேல் முகுந்தன் வரவேற்றார்.

கவர்னர் ரோசையா தலைமை தாங்கி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கள், அடையாள அட்டை, முதல் உதவி பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.காளிராஜ், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் திருமலை, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்தாராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

செயிண்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவன துணைத் தலைவர் முருகராஜ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்