முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி. ஆக. - 29 - கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து பிறகு  தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற அன்னா ஹசாரே  அரியானா மாநிலம் குர்காவூன் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று  கடந்த 16 ம் தேதி முதல் டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே பாராளுமன்றத்தில் தனது 3 முக்கிய கோரிக்கைள் உள்ளிட்ட லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து  தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தீயவாதி ஹசாரே முழு உடல் பரிசோதனைக்காக அரியானா மாநிலம் குர்காவூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குர்காவூனில் உள்ள  மேதாந்தா மெடிசிட்டி மருத்துவ மனையில்  தற்போது ஹசாரே சிகிச்சை பெற்று வருகிறார்.  இவர் இந்த ஆஸ்பத்திரியில் 2 அல்லது 3 நாட்களுக்கு தங்கியிருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.
தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதும்  காந்திஜியின் சமாதியான ராஜ்காட்டிற்கு செல்ல ஹசாரே திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆனால் டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் ஆஸ்பத்திரிக்கு  சென்றார். குர்காவூன் மருத்துவ மனைக்கு ஹசாரே வருகிறார் என்று கேள்விப்பட்டதும்  ஆயிரக்கணக்கான மக்கள் அவரை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என்ற  எண்ணத்தில் ஆஸ்பத்திரி முன்பு திரளாக கூடியிருந்தனர்.
ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது பிரபல இருதய நோய் நிபுணர்  டாக்டர் நரேஷ் ட்ரீகன் தனது மருத்துவ குழுவினருடன் ஹசாரே உடல் நிலையை கண்காணித்து வந்தார்.  உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பேசிய ஹசாரே தனது  உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் நரேஷ் ட்ரீகனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
உண்ணாவிரதம் மேற்கொண்ட ஹசாரேவுக்கு 7.5 கிலோ எடை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்