முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயை வழங்கினார். 

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் பாலமுருகனுடைய  தாய் குருவம்மாள்,  கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சந்தோஷ் அவர்களுடைய தாய் சித்ரா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மறைந்த படை அலுவலர் ஆனந்த் அவர்களுடைய மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் சபரிநாதனின் தாய் மனோன்மணி ஆகியோர் தமிழக முதல்வரிடம் இருந்து நிவாரண நிதியை பெற்றுக் கொண்டனர். 

இந்நிகழ்வின்போது, அரசு பொதுத்துறைச் செயலாளர் முனைவர் ஜகந்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து