முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலமேடு ஜல்லிக்கட்டில் 19 மாடுபிடி வீரர்கள் காயம்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      தமிழகம்
Palamedu-Jallikattu-2025-1-

மதுரை, மதுரை பாலமேட்டில் 1,100 காளைகள், 910 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயமடைந்தனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று மதுரை பாலமேட்டிலும், இன்று அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன. இதன்படி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நடந்து முடிந்தன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று காலை தொடங்கியது. இதனை தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து, காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின.

ஜல்லிக்கட்டுக்கு 4,820 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. எனினும், 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 1,900 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வழியே பதிவு செய்திருந்தனர். அவர்களில் 910 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாடுவார்கள். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் இடம் பிடிக்கும் காளைக்கு பரிசாக டிராக்டர் மற்றும் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளன. டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக பாலமேடு ஜல்லக்கட்டு போட்டி தொடங்கியவுடன் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நடந்து முடிந்த நான்கு சுற்றுகளில் மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர், பார்வையாளர்கள் (சிறுமி உட்பட) 6 பேர் என மொத்தமாக 19 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான்காவது சுற்று முடிவில் 5 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து