முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

வியாழக்கிழமை, 22 மே 2025      தமிழகம்
Stalin 2024-11-26

Source: provided

சென்னை: ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். 

மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்துக்காக மதுரை உத்தங்குடியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மதுரையில் ஜூன் 1-ல் நடக்கவுள்ள தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து 7 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள உத்தங்குடி அருகே பிரதான சாலையை ஒட்டியுள்ள 20 ஏக்கர் நிலத்தில் பொதுக் குழுக் கூட்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரே அரங்கில் 7 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கும். உணவருந்த தனியாக ஒரு அரங்கமும் அமைக்கப்படுகின்றன. இவை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது. மழை, காற்று, வெயிலால் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும், நட்சத்திர விடுதியைப்போன்று உள்ளரங்க அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உட்பட 7 ஆயிரம் பேர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்களது வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கும் இடவசதி தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து வெளியே செல்லும் கார்கள் பாண்டி கோயில் சுற்றுச்சாலையில் நேரடியாக இணையும் வகையில் புதிதாக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

காலை 9.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும். பகல் 12.30 மணியளவில் கூட்டம் முடிவடையும். தேர்தல் பணிகளை தீவிரமாக துவங்குவதற்கு அச்சாரமாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு மிக முக்கியமானதாக இருக்கும். கூட்டம் முடிவடைந்த பின்பு பொதுக்குழு உறுப்பினர்க ளுக்கு தடபுடலான சைவ, அசைவ விருந்து நடைபெறும். இதற்காக தமிழகத்தின் சிறந்த சமையல் கலைஞர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், அமைச்சர்கள், விஐபிக்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் படுகிறது. வாகன பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தி.மு.க. பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து