முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை; மரம் விழுந்து கேரள சிறுவன் பலி

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
rain 2023-05-25

Source: provided

ஊட்டி : நீலகிரியில் நேற்று மரம் விழுந்து, 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கோவை, நீலகிரிக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளது. தொட்டபெட்டா, பைரன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், சூட்டிங் பாயின்ட், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஊட்டியில் 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் இருந்து ஊட்டி நோக்கி வந்த கார் மீது மரம் விழுந்ததில் ஆதிதேவ் என்ற சிறுவன் உயிரிழந்தார். கேரளாவில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் துயரம் நிகழ்ந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து