முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தானேவில் திடீர் பரபரப்பு: இளைஞர் கொரோனாவுக்கு பலி

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      இந்தியா
virus

Source: provided

மும்பை : தானேவில் 21 வயது இளைஞர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அந்த இளைஞர் பலியானதாக தானே நகராட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே கர்நாடகத்தில் 84 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பல மாநிலங்களில் முக்கியமாக கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பதிவான கொரோனா பாதிப்புகள் தொடர்பான விஷயத்தை மத்திய சுகாதாரத் துறை மதிப்பாய்வு செய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இந்த பாதிப்புகளில் பெரும்பாலானவை லேசானவை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே கண்காணிப்பில் உள்ளனர். இருப்பினும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விழிப்புடன் உள்ளதோடு நிலைமையை உன்னிப்பாகவும் கண்காணித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து