Idhayam Matrimony

படை தலைவன் திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      சினிமா
Badai-Thalaivan-Review 2025

Source: provided

வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஒரு குட்டி யானையை நாயகன் சண்முக பாண்டியன் வளர்க்கிறார். இந்நிலையில் யானைக்கு ஒரு ஆபத்து வருகிறது, அந்த ஆபத்தில் இருந்து யானையை அவர் எப்படி காப்பற்றுகிறார், யானைக்கு வந்த ஆபத்து என்ன? யாரால் வந்தது என்பதை தமிழகத்தில் தொடங்கி ஒடிசாவில் முடியும் கதையே ‘படைத் தலைவன். நாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியன், தனது முந்தைய இரண்டு படங்களை விட, இதில் நல்ல வேறுபாட்டை காட்டி நடித்திருக்கிறார். சண்முக பாண்டியனின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜா நடிப்பில் பின்னியிருக்கிறார். பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் மற்றும் யாமினி சந்தர், கருடன் ராம், ரிஷி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் தங்கள் வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இளையராஜா இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமரா கிராமத்து பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் யு.அன்பு, வெளிநாட்டு படமாகவும், உள்ளூர் படமாகவும் ஏற்கனவே நாம் பார்த்த ஒரு கதையை அவரது பாணியில் கொடுக்க முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில் யானையை காப்பாற்ற புறப்படும் இளைஞன் ஒருவனின் பயணத்தை உணர்வுப்பூர்வமாக கடத்தியிருந்தால் படம் நிச்சயம் வென்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து