முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Tasmac-Shop 2023 04 25

Source: provided

சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியூசி) மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (11.11.2025) செவ்வாய்க்கிழமை, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஏஐடியூசி அலுவலகத்தில், சங்கத் தலைவர் நா. பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் எம். இராதாகிருஷ்ணன், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் த தனசேகரன், பொருளாளர் கே. கோவிந்தராஜ், துணைத் தலைவர்கள் மதுரை எஸ். பாலச்சந்திரன், திருச்சி ராயப்பன், செயலாளர்கள் எம். செல்வம், சி. மாரி, ஆர் . இளங்கோ, பி. எம். மணிகண்டன், திண்டுக்கல் ஆர் மணிகண்டன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசும், நிர்வாகமும் திறந்த மனதுடன் நேர்மறை அணுகுமுறையோடு பேசி தீர்வு காண வேண்டும் என மாநில செயற்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சட்டபூர்வமாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளாகும்.

ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் அந்தக் கோரிக்கைகள் அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒப்புதல் தர வேண்டிய கோரிக்கைகள் என்று தொடர்ந்து கூறி வருவதால், டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் (16.12.2025) செவ்வாய்க்கிழமை முதல், சங்கத்தின் தலைவர் நா.பெரியசாமி தலைமையில், மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பாக கூடி பேரணியாக சென்று,அரசின் தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொள்வது என்று சங்கத்தின் மாநில செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) முன் வைத்துள்ள பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாள்களுக்குமான கோரிக்கைகளாகும்.

இந்தக் கோரிக்கைகள் கட்சி அரசியல் சார்ந்ததோ, சங்க கருத்தோட்டங்கள் கொண்டதோ, அரசுக்கு எதிராகவோ முன் வைக்கப்பட்டதல்ல, 23 ஆண்டுகளாக தொடரும் பணிப்பாதுகாப்பற்ற நிலைக்கு முடிவு கண்டு, ஒட்டு மொத்த டாஸ்மாக் பணியாளர்களின் கண்ணியமான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளாகும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்துப் பணியாளர்களும் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகள் வெற்றி பெற ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குமாறு பணியாளர்கள் அனைவரையும் மாநில செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து