முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாரு போட்ட கோடு இசை வெளியீட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      சினிமா
Yaru-Potta-Kodu 2025-12-02

Source: provided

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், லெனின் வடமலை இயக்கத்தில், பிரபாகரன் மற்றும் மேஹாலி மீனாட்சி நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் வி.இசட்.துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் லெனின் வடமலை பேசுகையில், ஒரு படம் இயக்குவதற்கு ஆயிரம் போராட்டம், படம் கிடைத்த பிறகு ஐயாயிரம் போராட்டம், படம் முடிந்த பிறகு பன்மடங்கு போராட்டம், இந்த போராட்டங்கள் அனைத்தையும் நான் காட்சியாக தான் பார்த்தேன், விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். ரசித்தேன், மனிதர்களை படித்தேன். ஒரு படம் பண்ண அசுர பலம் வேண்டும், அசுர பலத்தோடு இப்படத்தை செய்திருக்கிறோம் என்றார். டிசம்பர் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்தை தமிழகம் முழுவதும் ஃப்ரைடே பிக்சர்ஸ் அஜய் வெளியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து