முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டி-20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா கட்டாக்கில் இன்று மோதல்

திங்கட்கிழமை, 8 டிசம்பர் 2025      விளையாட்டு
Cricket-2025-12-08

கட்டாக், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் இன்று நடக்கிறது.

தொடரை வென்றது...

விசாகப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 271 ரன் இலக்கை இந்திய அணி 39.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் சதமும் (116 ரன்), ரோகித் சர்மா (75 ரன்), விராட் கோலி (65 ரன்) அரைசதமும் விளாசினர். வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

தனி பயிற்சியாளர்....

இதனையடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களை பற்றி சொன்னார்கள். ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் (டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால்) இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று கூறியுள்ளார். 

ஆச்சரியமாக உள்ளது...

கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர் இவ்வாறு சொன்னது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம். நாங்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. எனவே, நாங்கள் என்ன செய்தாலும் அதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு கம்பீர் கூறினார்.

அணியில் ஹர்திக், கில்

 

இன்று தொடங்கும் முதல்வ டி20 போட்டியில் காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், விளையாடுவார் என பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் ஆடும் லெவனில் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து