முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கிரேட் நிக்கோபார்

நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவு கிரேட் நிக்கோபார் தீவு. இந்தத் தீவுப்பகுதியில் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் உள்ளன. போர்ட் பிளேர் நகரத்திலிருந்து ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு மூலமாக இந்த தீவை நாம் அடையலாம்.

சோகத்தை வெளிப்படுத்த

ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்புக்கு பயன்படுத்திய பேனாவை உடைத்து விடுவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இது. இதற்கு காரணம், உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காகவும், சோகத்தை வெளிப்படுத்தவும் இதை செய்து வந்துள்ளனர். ஆனால், நமது இந்திய சட்டப் புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை. ஆங்கில யர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறை பின்பற்றப்பட்ட து. அதற்காக நாமும் பின்பற்ற வேண்டுமா என்ன?.

மூட்டுகள் பலப்பட

எலும்பு மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அழற்சி எதிர்ப்பு உணவுகளான ஆலிவ் ஆயில், முழு தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டும்.

கார்/ பைக்குகளுக்கு நைட்ரஜன் நிரப்பலாமா

நமது பைக் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு டயர்களில் ஏர் நிரப்புவது வழக்கம். அவை பொதுவான காற்றுதான். ஆனால் தற்போது புதிதாக சில பெட்ரோல் நிலையங்களில் நைட்ரஜன் வாயு நிரப்புகின்றனர். இவை வாகனங்களுக்கு நல்லதா... கொஞ்சம் பார்க்கலாமா...இந்த வகையான காற்று தான் ரேஸ் கார்/பைக் டயர்களில் நிரப்பப்படுகிறது. இந்த நைட்ரஜன் காற்றை நம் டயரில் அடைப்பது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. வாகனங்களில் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறையாது. மேலும் பிரஷர் அளவை துல்லியமாக கணக்கிடும் எந்திரங்கள் தற்போது வந்துள்ளதால் டயருக்கு தேவையான துல்லியமான பிரஷர் கிடைக்கும். முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக்ட் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடிக்காது. பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் அதிகரிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் சாய்ஸ்...நைட்ரஜன் தானே.

கப்பல் சுரங்கம்

நார்வேயில் கடும்பாறைகளாலான தீபகற்பத்தின் அடியில் உலகின் முதல் கப்பல் சுரங்கம் உருவாக்கப்பட இருக்கிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்க்கப்படவுள்ளது.

ஒரே சூழல்

சூரியக் குடும்பத்தில் 10-வது கோளான புளூட்டோவில், பூமியில் காணப்படுவதை போல பனிக்கட்டிகள் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், புளூட்டோ போன்ற சுற்றுச் சூழல் மற்றும் சீதோஷ்ண நிலை அமைந்த வேறு சில கிரகங்களிலும் பனிக்கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago