முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எலுமிச்சம் பழச்சாறு

எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை பாதிக்கும். எனவே ஸ்ட்ரா உதவியுடன் குடித்தால் நல்லது.  வெறும்வயிற்றில் குடிப்பதனால் நெஞ்செரிச்சல், வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படும். தொடர்ந்து நாம் வெறும் வயிற்றில் குடித்தால் வலி ஏற்படும் அபாயமும் உண்டு.

சமண படுகைகளைப்போல மலை உச்சியில் பாறைகளை குடைந்து வீடு கட்டி வசிப்பவர்கள்

தென்னிந்தியா முழுவதும் உள்ள எந்த மலைக்கும், குன்றுக்கும் சென்றாலும் அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமணத் துறவிகளால் உருவாக்கப்பட்ட குடை வரை சிற்பங்களையும், கோயில்களையும், படுக்கைகளையும் காண முடியும். இன்றைக்கும் தொல்லியல் துறையின் மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்றாக நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அவை தாங்கி நிற்கின்றன. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் அப்படி யாராவது மலை உச்சியில் பாறையை குடைந்து குடை வரை குடியிருப்பை அமைப்பார்களா என்றால்... ஆம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் அது நடந்துள்ளது இங்கு அல்ல. இத்தாலியில். அந்நாட்டில் உள்ள Dolomites Mountains என்ற மலையில்தான் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2700 மீட்டர் அதாவது 8 ஆயிரத்து 858 அடி உயரத்தில் பாறையை குடைந்து தன்னந்தனிமையில் ஒருவர் வீட்டை உருவாக்கியுள்ளனர். முதலாம் உலகப் போரின் போது இத்தாலியர்களுக்கும் ஆஸ்திரோ ஹங்கேரியர்களுக்கும் சண்டை வந்த போது அதிலிருந்து தப்ப விரும்பிய சிலர் இது போன்று யாரும் எளிதில் வரமுடியாத இந்த இடத்தில் வீட்டை உருவாக்கினர். தொலைவிலிருந்து பார்க்கும் போது பாறையில் ஒட்டியிருப்பது போல தோன்றும் இந்த வீடு தற்போது பாரம்பரிய சுற்றலா தளத்தில் இடம் பெற்றுள்ளது. மிகவும் ஆச்சரியமும் வியப்பும் அளிக்கும் செய்தியாக இது உலகுக்கு தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோபோ கார்கள்

துபாய் காவல்துறையில், குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் காணும் வகையிலான பேஷியல் ரெகாக்னிஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி ரோபோ கார்கள் இணைக்கப்பட உள்ளது. ஓ-ஆர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ கார்கள், வெப்பம் அதிகமுள்ள சூழலிலும் படம் பிடிக்கும் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் கொண்டது.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

சிவா அய்யாத்துரை : இவரை தெரியுமா

1978 ஆம் ஆண்டு அது நடந்தது. இன்றைய யுகத்தை அதுதான் ஆட்சி செய்யப் போகிறது என அப்போது யாரும் கணித்திருக்க முடியாது. ஏனெனில் அப்போது அதை கண்டுபிடித்தவர் 14 வயது இளைஞர். அவர் பெயர் சிவா அய்யாதுரை. அவர் என்ன செய்தார். கணிப்பொறியில் தகவல்களை பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு புரோகிராமை வடிவமைத்தார். அதற்கு அவர் வைத்த பெயர் EMAIL. இப்போது தெரிகிறதா அதன் அருமை.  1982 இல் அதற்கான காப்புரிமை அவருக்கு கிடைத்தது. ஆம் இமெயிலின் தந்தை தான் சிவா அய்யாத்துரை என்ற தமிழர். நமக்கெல்லாம் பெருமைதானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago