முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி பெர்மிட் அச்சடித்து லாரிகளில் கற்கள் கடத்தல் ரூ.82 ஆயிரம் கோடி கிரானைட் சுரங்க ஊழல் அரசுக்கு தெரிந்தே நடக்கும் அவலம்

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2011      ஊழல்

 

மதுரை, செப்.21-

போலி பெர்மிட் அச்சடித்தும் அரசுக்கு குத்தகை பணம் செலுத்தாமலும் சுமார் ரூ.82 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் லாரிகளில் கடத்தப்பட்டுள்ளது. இது தி.மு.க. அரசுக்கு தெரிந்தே நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசுக்கு குத்தகை பணம் செலுத்தாமல் ரூ.82 ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக தொழில்துறை செயலாளர், தலைமை செயலாளருக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போலி பெர்மிட் புகார்

மேலூரை சேர்ந்த ந.முருகேசன் என்பவர் தமிழக முதல்வருக்கு 19.4.2010-ம் தேதியன்று ஒரு புகார் மனு அனுப்பினார். இந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மதுரை மாவட்ட கனிமம் மற்றும் புள்ளியியல் அலுவலகம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. ஆனால் இதை போலவே டூப்ளிகேட் அலுவலகம் ஒன்று மதுரை மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இங்கு டூப்ளிகேட் பெர்மிட் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் டூப்ளிகேட் பெர்மிட் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிந்தே வழங்கப்படுகிறது. இந்த போலி பெர்மிட்  மேலூர் தாலுகா பதினெட்டான்குடி கிராமம் சர்வே எண் 163/2அ யில் இருந்து கிரானைட்கல் எடுத்து செல்வது போல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்த குவாரியே தற்போது நடக்கவில்லை என்றும் புகார் மனுவில் கூறி இருந்தார்.

4 மாதங்களுக்கு மேல்

ஆகியும் நடவடிக்கை இல்லை

இந்த புகார் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மாறுதல் செய்யப்பட்டது. இந்த போலி பெர்மிட் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மேலூர் காவல் துறையின் துணை கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சிதலைவர் கடிதம் எழுதினார். இதன் பின் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. கிரானைட் முறைகேடு தொடர்பாக எந்த புகார் கொடுத்தாலும் மதுரை மாவட்ட ஆட்சிதலைவரும், மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதே போல் போலி பெர்மிட் குறித்து புகார் கொடுத்து 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் போலி பெர்மிட் மூலம் கிரானைட் கற்கள் கடத்தப்படுவது சம்பந்தமாக புகார் கொடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்து வருவதாக கடந்த 5-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை தொடர்ந்து பத்திரிகையில் செய்தி வெளிவந்துவிட்டது என்பதற்காக மாவட்ட ஆட்சிதலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலி பெர்மிட் வெளியிட்டு கிரானைட் கற்களை கடத்தியதாக பிரகாஷ் என்பவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 465, 468, 471, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

எந்தெந்த சுரங்கங்களில்

இருந்து கற்கள் கடத்தப்பட்டது?

மேலூர் தாலுகா பதினெட்டான்குடி கிராமத்தில் ங.நாகராஜன் என்பவருக்கு சொந்தமான கிரானைட் சுரங்கத்தில் இருந்து கற்கள் கொண்டு செல்லப்படுவதாக போலி பெர்மிட் தயார் செய்து கற்கள் கடத்தப்பட்டுள்ளன. ஆனால் ங.நாகராஜனுக்கு 29.4.2009-ம் தேதிக்கு பிறகு அரசு பெர்மிட் எதும் வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சிதலைவர் கூறுகிறார்.  இப்படி இருக்கும் போது போலி பெர்மிட் போட்டு 44 லாரிகளில் கிரானைட் கற்கள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த 44 லாரிகளில் ஏற்றி செல்லப்பட்ட கிரானைட் கற்கள் எந்தெந்த சுரங்கங்களில் இருந்து கடத்தப்பட்ட கற்கள்? இந்த சுரங்க குத்தகைதாரர்கள் கைது செய்யப்பட்டார்களா? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை அரசு ஏன் காப்பாற்ற முயல்கிறது என்பதை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.

அரசுக்கு தெரிந்தே

வழங்கப்படும் போலி பெர்மிட்

அரசு புறம்போக்கு நிலத்தில் திருட்டுத்தனமாக சுரங்கம் தோண்டி அரசு சொத்துக்களை கொள்ளை அடிப்பதாக புகைப்படம், வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் மதுரை மாவட்ட ஆட்சிதலைவர், உயர் போலீஸ் அதிகாரிகள், கிரானைட் சுரங்க குத்தகைதாரர்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏன் முதல் அமைச்சருக்கு புகார் கொடுத்தும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. சுரங்க குத்தகைதாரர்கள் மீது புகார் வந்த உடன் நடவடிக்கை எடுத்து இருந்தால் லாரிகளில் போலி பெர்மிட் போட்டு கற்களை எப்படி ஏற்றி செல்வார்கள்? எனவே அரசுக்கு தெரிந்தே போலி பெர்மிட்கள் வழங்கப்படுவது உறுதி ஆகி உள்ளது.

கண்துடைப்பு நாடகம்

பத்திரிகையில் செய்தி வெளிவந்ததற்காக எடுக்கப்பட்டுள்ள கண்துடைப்பு நடவடிக்கைதான் இந்த போலி பெர்மிட், கைது நாடகம் ஆகும். பல பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து கிரானைட் கற்களை பெர்மிட் இல்லாமல் தற்போது கடத்தி கொண்டுதான் இருக்கின்றன.

குத்தகை பணம் செலுத்தாமல்

ரூ.82 ஆயிரம் கோடி

கற்கள் கடத்தல்

தமிழகம் முழுவதும் அரசுக்கு குத்தகை பணம் செலுத்தாமலும், போலி பெர்மிட் போடப்பட்டும் லாரிகளில் கற்கள் ஏற்றி செல்லப்பட்டு சுமார் ரூ.82 ஆயிரம் கோடி மதிப்புள்ள கற்கள் கடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கிரானைட் சுரங்கங்களின் நீளம், அகலம், ஆழம் ஆகிய விபரங்கள் புவியியல் மற்றும் சுரங்க துறையில் பராமரிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிரானைட் சுரங்கங்களையும் அளவு எடுத்தால் ரூ.82 ஆயிரம் கோடி மெகா ஊழல் வெளியாகும்.

 

பாக்ஸ் 1

அரசுக்கு தெரிந்தே

வழங்கப்படும் போலி பெர்மிட்

அரசு புறம்போக்கு நிலத்தில் திருட்டுத்தனமாக சுரங்கம் தோண்டி அரசு சொத்துக்களை கொள்ளை அடிப்பதாக புகைப்படம், வீடியோ ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கிரானைட் சுரங்க குத்தகைதாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் முதல் அமைச்சருக்கு புகார் கொடுத்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. சுரங்க குத்தகைதாரர்கள் மீது புகார் வந்த உடன் நடவடிக்கை எடுத்து இருந்தால் லாரிகளில் போலி பெர்மிட் போட்டு கற்களை எப்படி ஏற்றி செல்வார்கள்? எனவே அரசுக்கு தெரிந்தே போலி பெர்மிட்டுகள் வழங்கப்படுவது உறுதி ஆகிறது.

 

பாக்ஸ்-2

கண்துடைப்பு நாடகம்

பத்திரிகையில் செய்தி வந்ததற்காக  எடுக்கப்பட்டுள்ள கண்துடைப்பு நடவடிக்கைதான் இந்த போலி பெர்மிட் கைது நாடகம் ஆகும். பல பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து கிரானைட் கற்களை பெர்மிட் இல்லாமல் தற்போது கடத்தி கொண்டுதான் இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்