முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், மார்ச் 8 - திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்  பங்குனி பெருவிழா நேற்று கொடியே ற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 22-ம்தேதி வரை நடைபெறும். 

முதல் நாளான நேற்று காலை 7 மணி அளவில்  உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன், முருகப் பெருமா னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து மேள தாளமுழங்க முருகப் பெருமான், தெய்வானை இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமி  அருள்பார்வையில் தங்க முலாம் பூசப்பட்ட 27 அடி  உயரமுள்ள கம்பத்துக்கு பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை யடுத்து, மாவிலை தர்பை புல், பூமாலை ஆ கியவற்றால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, 8 மணிக்கு மேள தாளங்கள் முழங்க நாகஸ்வரம் ஒலிக்க கொடியேற்றப்பட்டது. 

பின்னர் கம்பத்துக்கும், சுவாமிக்கும் மகாதீப. தூப  ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக தெய்வானையுடன், முருகப் பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலி்க்கிறார். சன்னதி தெருவில் பதினாறு கால் மண்டபம் அருகே அமைக்கப் பட்டுள்ள பந்தலில் தினமும் மாலையில் சொற்பொழிவு, பட்டிமன்றங்கள் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 17-ம் தேதி பங்குனி உத்திரமும், 19-ம் தேதி பட்டாபிஷேகமும் நடைபெறும். 20-ம் தேதி முருகப் பெருமான், தெய்வானை  திருக்கல்யாணமும், 21-ம்தேதி தேரோட்டமும், 22-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறும்.                                              

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்