முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல்: தேமுதிக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 24 - பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முதல் கட்டமாக திருவள்ள?ர், வடசென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல் ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு இருந்தார். 

இதில் நாமக்கல் வேட்பாளர் என்.மகேஷ்வரன் உடல் நிலையை காரணம் காட்டி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார். இன்று நாமக்கல் உள்பட மீதம் உள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 

தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளரும் உயர் மட்டக்குழு உறுப்பினருமான எல்.கே.சுதீஷ் சேலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் தொகுதியில் என்.மகேஷ்வரனுக்குப் பதில் எஸ்.கே.வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

2_வது வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:_ 

1. கள்ளக்குறிச்சி _ டாக்டர் வி.பி.<ஸ்வரன் (மருத்துவர் அணி செயலாளர்) 

2. திருப்பூர் _ என்.தினேஷ் குமார் (திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்) 

3. கரூர் _ என்.எஸ்.கிருஷ்ணன் (கரூர் மாவட்ட செயலாளர்) 

4. விழுப்புரம் (தனி) _ கே.உமாசங்கர் (விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர்)

5. சேலம் _ எல்.கே.சுதீஷ் (உயர்மட்டக்குழு உறுப்பினர், இளைஞர் அணி செயலாளர்) 

6. மத்திய சென்னை _ பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன் 

7. கடலூர் _ பேராசிரியர் ஆர்.ராமானுசம் (ஆசிரியர்_ பட்டதாரி அணி துணை செயலாளர்) 

8. திண்டுக்கல் _ ஏ.கிருஷ்ணமூர்த்தி (திண்டுக்கல் மாவட்டம்) 

9. திருநெல்வேலி _ எஸ்.சிவனணைந்த பெருமாள் (மராட்டிய மாநில செயலாளர்) 

10. நாமக்கல் _ எஸ்.கே.வேல் (வழக்கறிஞர் அணி துணை செயலாளர்) 

ஏற்கனவே வெளியிடப்பட்ட 4 தொகுதி வேட்பாளர்கள் விவரம்:_ 

1. திருவள்ள?ர்_ வி.யுவராஜ் 

2. வடசென்னை_ எம்.சவுந்தரபாண்டியன் 

3. மதுரை _ டி.சிவமுத்துக்குமார்.

4. திருச்சி _ விஜயகுமார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்