முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து அணியை வாங்கும் தெண்டுல்கர் - கங்குலி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.14 - ஐபிஎல் கிரிக்கெட்டை போலவே இந்தியன் சூப்பர் லீக் காலபந்து போட்டி நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதம் இந்தப் போட்டி தொடங்குகிறது.டெல்லி, மும்பை,கொச்சி, கொல்கத்தா, பெங்களூர், புனே, கோவா, கவுகாத்தி, ஆகிய 8 இடங்களில் போட்டி நடைபெறுகிறது.

கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் தெண்டுல்கர், கங்குலி ஆகியோர் கால்பந்து அணிகளை வாங்கும் ஆர்வத்தில் உள்ளனர். கொச்சி அணியை தெண்டுல்கரும், கொல்கத்தா அணியை கங்குலியும் வாங்கவுள்ளனர். இந்தி நடிகர்கள் சல்மான்கான் புனே அணியையும், ரண்பீர் கபூர் மும்பை அணியை வாங்குகிறார்கள். டென் கேபிள் நிறுவனர் சமீர் டெல்லி அணியை வாங்க உள்ளார்.

ஐபிஎள் போட்டியில் ஐதராபாத் அணியை வாங்கிய சன் டிவி நிறுவனம் பெங்குளூர் அணியை வாங்கலாம் என்று எதிர்பாப்க்கப்படுகிறது. யார் எந்த அணியை வாங்குகிறார்கள் என்ற விவரம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹெர்மன் கிரஸ்போ, ஹென்றி, ரோபி பவுலர் போன்ற முன்னணி வீரர்கள் ஆடுகிறார்கள். 59 இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள். ஏலத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இடம் பெறுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 10 வெளிநாட்டு வீரர்கள், 8 இந்திய வீரர்கள், 4 உள்ளூர் வீரர்கள் இடம் பெறுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்