முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

அபுதாபி, ஏப்.16 - பல்வேறு சர்ச்சைகளுக்கு அடையே ஐபஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.  ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது. பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப்போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.

முதல் போட்டியில் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயலஸ் கோப்பையை வென்றது. 2009-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் கோப்பையை வென்றது. 2010-11-ஆம் ஆண்டு நடந்த3-வது, 4-வது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. 2012-ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கடந்த ஆண்டு மும்பை இந்சியன்ஸ் அணியும் ஐபிஎஸ் கோப்பையை வென்றது.

7-வது ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. பாராளுமன்றத் தேர்தல் காரணமாக இந்தப்போட்டி 2 கட்டமாக நடத்த்ப்படுகிறது. முதல் கட்டமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 2-ஆம் கட்டமாக மே 2-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை இந்தியாவிலும் நடக்கிறது. கடந்த ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை மிகவும் பூதாகரமாக வெடித்தது. பல்வேறு சர்ச்சைக்கு இடையேயான இந்த போட்டி நடத்தப்படுகிறது.

முதல் 3 ஐபிஎல் போட்டியில் விளையாடிய போல் இந்த போட்டியிலும் 8 அணிகள் பங்கேற்கின்றனர. கடந்த முறை விளையாடிய புனே வரியர்ஸ் அணி நீக்கப்பட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் இந்த போட்டியில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டங்கள் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த ஐபிஎல் போட்டிக்காக  வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட்டனர். 24 வீரர்கள் மட்டும் தக்கவைக்கப்பட்டனர். மற்ற வீரர்கள் அணைவரும் ஏலத்தில் விடப்பட்டனர். இதனால் ஒவ்வொரு அணியிலும் முன்பு விளையாடிய வீரர்கள் தற்போது வேறு அணியில் இடம் பெற்றுள்ளர். வீரர்களின் மாற்றத்தால் இந்த ஐபிஎல் போட்டி முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். 

அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் நடைபெறும் இந்த ஆட்டம் சோனி செட் மேக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

சூதாட்டம் சர்ச்சை விவகாரத்தால் ஐபிஎல் பிரமாண்ட தொடக்க விழா நடைபெறவில்லை. தொடக்க விழா விருந்து நிகழ்ச்சியாக அபுதாபி நேட்சத்திர ஓட்டலில் நேற்று நடத்தப்பட்டது. இதில் இந்தி நடிகைகள் மாதூரி திட்சித், தீபிகா படுகோனே நடனமாடுனாற்கள்.

அபுதாபியில் நேற்று டோனி அளித்த பேட்டியில் இந்த முறை சூதாட்டம் எதுவும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் சக வீரர்களிடம் தகுந்த முறையில் கூறியிருக்கிறோம். சூதாட்டம் பற்றிய கவலை தெவையில்லை என்று டோனி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்