முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசு குறைப்பு!

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 16 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெட்ரோல், டீசல்  விலைகளை கடந்த அடிக்கடி உயர்த்தி வந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த விலை உயர்வு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து விட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசு குறைக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்