முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காங்., கட்சியே காரணம்: மோடி

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


ஈரோடு , ஏப், 18 - தமிழகத்தில் நிலவும் மின் வெட்டுக்கு காங்கிரசே காரணம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் கூறியதாவது,
இந்த தேர்தல்  வித்தியாசமானது. இந்ததேர்தலில் கட்சிகளோ,  வேட்பாளர்களோ போட்டிட வில்லை.  மக்கள் தான் போட்டியிடுகிறீர்கள்.நாட்டில் ஒரு புதிய  அரசு  அமையபோகிறது. அது முடிவு எடுக்கும் ஆற்றல் பெற்ற அரசாக இருக்கும். தன் மனச்சாட்சி படி செயல்படும்  பிரதமராக இருப்பார்.  இன்றைய சூழ்நிலையில் தமிழகம்  இருளில் இருப்பதை நான் விரும்பவில்லை. குஜராத்தில்  கடந்த காலங்களில்  மின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் அதை நாங்கள் மாற்றி விட்டோம்.
தமிழகத்தில் நிலவும் மின் வெட்டிக்கு ஒரு பெண்தான் அதற்கு முட்டுகட்டையாக உள்ளார் . சோனியா காந்தியின் முயற்சி இல்லாததால் தான் தொழிற்சாலைகள்,வேலைவாய்ப்புகள் எல்லாம் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டது . இதற்கு மத்திய அரசின் மெத்தனம் தான் காரணம். 2012 ஆம் ஆடில் 77 லட்சம்  பேருக்கு  வேலைவாய்ப்பு இல்லை என வேலை  வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில்  10 ஆயிரத்து 800 பேருக்கு மத்திய அரசு வேலை கொடுத்தள்ளது. கு ஜராத்தில்இளைஞர்களின்  திறமையை வளர்க்க அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. இவ்வாறு நரேந்திரமோடி  பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்