முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித வெள்ளி: வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நாகை, ஏப்.19 - புனித வெள்ளியை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலையத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. மாலையில் சிலுவைப் பாதை ஊர்வலம் நடந்தது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 40 நாள் தவகால விரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி புனித ஆரோகிய மாதா பேராலயத்துக்கு திருச்சி, புதுக்கோட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். இதனால் வேளாங்கண்ணி கடந்த ஒரு வார காலமாக விழாக்கோலம் பூண்டுள்ளது.

கடந்த 13-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாங்கண்ணி பிரார்த்தனை மண்ட்பத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு பயிர்சி குருமார்களின் கால்களை கழுவி முத்தமிடும்  நிகழ்ச்சி நடந்தது. பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பிறகு பேராலய அதிபர் மைக்கேல் அடிகளார், பயிற்சி குருமார்களின் கால்களை கழுவி முத்தமிட்டார். பின்னர் அவர்களுக்கு கால்களில் மல்லிகை பூவை  தூவி அர்ச்சித்தார். இதில் ஆயிரக்கணக்கா்ன பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான நேற்று புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதை முன்னிட்டு கிறிஸ்துவ ஆலயங்களில் நேற்று  சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று காலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெற்றது. நேற்று மாலை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக்கூறும் வகையில், சிலுவை பாதையில் புனித சிலுவையை கிறிஸ்துவர்கள் ஏந்தி சென்றனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை முடிவில் புனித சிலுவைக்கு பக்தர்கள் முத்தமிடுவார்கள். விழாவையோட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்