முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டு போட படப்பிடிப்புகளை ரத்து செய்த நடிகர்கள்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - சென்னையில் நடிகர்கள் ரஜினிகாந்தி, கமல்ஹாசன், பிரபு, சிவக்குமார், சரத்குமார் எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர், தியாகு, ராதாரவி, டி.ராஜேந்திரன், சின்னிஜெயந்த், ஜெயம்ரவி, விஷால், தனுஷ், விக்ரம், விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், சிம்பு, ஜீவா, சுந்தர்.சி. உள்ளிட்ட நடிகர்களும், மனோரமா, வெண்ணிராடை நிர்மலா, ராதிகா, அம்பிகா, குஷ்பு, ஜோதிகா, மீனா, ஷாலினி, கௌதமி உள்ளிட்ட நடிகைகளும் அந்ததந்த வாக்கு சாவடிகளில் ஓட்டுபோட்டனர்.

 ஒட்டு போடுவதற்காக நடிகர்கள் பலர் நேற்று படப்பிடிப்புகளை ரத்து செய்தார்கள். கமல் நடிக்கும் 'உத்தமவில்லன்' படப்பிடிப்பு பெங்களூரில் இடைவிடாது நடந்து வருகிறது. இதற்காக கமல் அங்கு முகாமிட்டு நடித்து வந்தார். ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பை நேற்று ஒருநாள் மட்டும். ரத்து செய்து விட்டு சென்னை வந்தார். ஓட்டு போட்டுவிட்டு நேற்று மாலையே பெங்களூர் புறப்பட்டு சென்றார். 

இதுபோல் 'அஞ்சான்' படப்பிடிப்புக்காக சூர்யா மும்பையில் இருந்தார். அவரும் ஓட்டு போடுவதற்காக நேற்று காலை சென்னை வந்தார். மாலையே மும்பை புறப்பட்டு சென்றார். விஜய் 'கத்தி' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடக்கிறது. ஓட்டுபோட அவரும் நேற்று ஒருநாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. 

கார்த்தி விளம்பர படமொன்றில் நடிக்க மும்பை சென்று இருந்தார். நேற்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை வந்து ஓட்டு போட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்